உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

  • Mar 17, 2025 - 11:20 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் […]

இந்தியா வினோத உலகம்

18 வயது மகனின் இழப்பை தாங்கமுடியாத40 வயது தாய் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

  • Mar 17, 2025 - 11:12 AM
  • 0 Comments

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (16-03)அவர் உயிரிழந்தார். யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது […]

உள்ளூர் செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வெல்லுமென்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  • Mar 17, 2025 - 11:01 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று (16-03-2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம்

  • Mar 17, 2025 - 10:53 AM
  • 0 Comments

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14-03-) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். மரண விசாரணையை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர் பதவி உயர்வு பெற்றுள்ளார்

  • Mar 17, 2025 - 10:33 AM
  • 0 Comments

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (15-03) திருகோணமலையில் இடம் பெற்றது. குறித்த பதவி உயர்வினை ஜனாதிபதியால் கடந்த செவ்வாய்க்கிழமை (11-03) வழங்கப்பட்டிருந்தது. குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், ஏ.டபிள்யூ அப்துல் சத்தார் உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பணம் கட்டியுள்ளது

  • Mar 17, 2025 - 08:37 AM
  • 0 Comments

வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு கட்டுப்பணமும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், சாவகச்சேரி நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், காரைநகர் பிரதேச சபைக்கு எட்டு கட்டுப்பணமும், ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,நெடுந்தீவு பிரதேச சபைக்கு ஐந்து கட்டுப்பணமும்,வேலணை பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு எழு கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிப்போம் – சாமர சம்பத் எம்.பி

  • Mar 17, 2025 - 08:27 AM
  • 0 Comments

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பட்டலந்த அறிக்கை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

  • Mar 17, 2025 - 08:14 AM
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பட்டலந்த சித்திரவதை சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தியவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே – விமல் வீரவன்ச

  • Mar 17, 2025 - 08:02 AM
  • 0 Comments

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார். பட்டலந்த விவகாரம் மீண்டும் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கடந்த காலத்தை போன்றே பயணிக்கும் என்பது எமது நிலைப்பாடாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். மனிதகுலத்துக்கு எதிராக சித்திரவதை முகாமை நடாத்திய உண்மையான குற்றவாளிக்கு பாரபட்சமின்றிய வகையில் தண்டனை வழங்குவதற்கான காலங்கள் பல கடந்து வந்துள்ள நிலையில் தற்போது ஊடக வெளிப்படுத்தலுக்காக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

  • Mar 17, 2025 - 07:49 AM
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp