உலகம் கனடா செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண யுவதி கனடாவில் கொலை சந்தேக நபர்கள் கைது

  • Apr 4, 2025 - 07:51 AM
  • 0 Comments

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக கனேயடி காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நிலக்சி ரகுதாஸ் என்பவரே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராவார். கடந்த மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். […]

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது

  • Apr 4, 2025 - 07:51 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த {ஹலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

  • Apr 4, 2025 - 07:29 AM
  • 0 Comments

இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையானது இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிவிதிப்பானது இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்திற்கு பாதகமான சமிக்ஞையை காட்டுகின்றது. விசேடமாக இலங்கையின் ஏற்றுமதியில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவைச் சென்றடைகின்றன. ஏனைய நாடுகளுக்கு இணையாக, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றது அநுர அரசு- விமல் வீரவன்ச

  • Apr 4, 2025 - 07:12 AM
  • 0 Comments

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எழுந்து வரும் சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்வதற்கும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் விளைவை என்றோ ஒரு நாள் நிச்சயம் எதிர்கொள்ள நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என அன்று அச்சுறுத்திய கட்சி ஜேவிபி என ஐ.தே.கட்சி தெரிவிப்பு

  • Apr 4, 2025 - 06:54 AM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து செய்ய முடியுமல்லவா? அவ்வாறில்லை என்றால் அதனை நீக்குவதாக மக்களுக்கு பொய் வாக்குறுதி அளித்தமைக்காக ஜே.வி.பி. அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார். ஐ.தே.க.வின் யாழ். […]

விளையாட்டு

கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டிக்கான நடுவர் தேர்வில் இலங்கை தமிழர் சித்தி பெற்றுள்ளார்!

  • Apr 3, 2025 - 08:25 PM
  • 0 Comments

கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனமான கராத்தே கனடாவின் ஏற்பாட்டில் புதன்கிழமை (02) நடாத்தப்பட்ட கராத்தே மத்தியஸ்தர் மற்றும் நடுவர் தேர்வில் இலங்கை தமிழரான சென்செய்.எஸ்.மனோகரன் காட்டா யு தர மத்தியஸ்தர் தரத்தில் சித்தி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமை (03) முதல் ஞாயிற்றுக்கிழமை (06) வரை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரில் இடம்பெறவுள்ள தேசிய கராத்தே சுற்றுப்போட்டிகளிலும் இவர் கடமையாற்ற உள்ளார். மேலும், எதிர்வரும் பான் அமெரிக்கன் கராத்தே மத்தியஸ்தர் மற்றும் நடுவர் தேர்வில் பங்கெடுக்கும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

22 முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது

  • Apr 3, 2025 - 01:54 PM
  • 0 Comments

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு தொடரும் விளக்கமறியல்

  • Apr 3, 2025 - 01:02 PM
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு […]

உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

  • Apr 3, 2025 - 12:45 PM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த {ஹலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கைக்கும் ஆப்படித்த அமெரிக்க ஜனாதிபதி பொருட்களுக்கு 44 வீத வரி விதிப்பு

  • Apr 3, 2025 - 07:48 AM
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44மூ வரியும் அடங்கும். அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. மேலும், வியட்நாமுக்கு 46மூ, சீனாவுக்கு 34மூ, இந்தியாவுக்கு 26மூ, பிலிப்பைன்ஸுக்கு 17மூ மற்றும் சிங்கப்பூருக்கு […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp