உள்ளூர் செய்திகள்

நித்தியானந்தா சுவாமிகள் இறந்துவிட்டார்

  • Apr 2, 2025 - 06:59 AM
  • 0 Comments

நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே நித்தியானந்தா இறந்துவிட்டதாக காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காணொளி வெளியாகியதையடுத்து அவரை பின்பற்றும் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்,அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் காணொளி ஒன்றில் தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். வடமராட்சி கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக்கட்களை நிறுவியுள்ளனர்

  • Apr 1, 2025 - 10:05 PM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர் இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

  • Apr 1, 2025 - 04:32 PM
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்துவதறகான சாத்தியமில்லையென அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

  • Apr 1, 2025 - 03:59 PM
  • 0 Comments

மாகாண சபை தேர்தல் இந்த வருடம்இடம்பெறாது எனஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கைமூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது,அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும்,மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்தவேண்டும்,சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும்,நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில்; உருகுலைந்த நிலையில் ஆணா பெண்ணா என்று அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு!

  • Apr 1, 2025 - 03:15 PM
  • 0 Comments

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று  காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்pல் 96 கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த மூவர் கைது!

  • Apr 1, 2025 - 07:46 AM
  • 0 Comments

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (30-03) இரவு கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் சுகாதார துறையின் மேம்பாட்டிற்கு AI தொழில்நுடபம் அவசியமென்கிறார் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • Apr 1, 2025 - 07:37 AM
  • 0 Comments

உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சி சுகாதார அமைப்பிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் எதிர்வரும் காலங்களில் சுகாதார சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க கூடிய ஒரு முன்னோடி திட்டம் அவசியம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மருத்துவ நிர்வாகிகள் நிறுவனத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான பதவியேற்பு விழா அண்மையில் கொழும்பில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் யாரென்பதை வெளிப்படுத்த ஜனாதிபதி நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?- உதய கம்மன்பில

  • Apr 1, 2025 - 07:23 AM
  • 0 Comments

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

  • Apr 1, 2025 - 12:59 AM
  • 0 Comments

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து  உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என  அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார் “மாகாண சபை முறைமை குறித்து இந்தியா எமக்குக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில்-ஜனாதிபதி

  • Apr 1, 2025 - 12:50 AM
  • 0 Comments

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று சுட்டிக்காட்டினார். “அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும், ஒரு அரசாங்கம் குற்றவாளிகளை எவ்வாறு தண்டிக்கும்?” அரசாங்கத்தின் பங்கு என்ன? அரசாங்கத்திடம் சில சட்டங்கள் உள்ளன. திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp