உள்ளூர் செய்திகள்

தூய்மைபடுததியதனை இராணுவ ஆக்கிரமிப்பாகவே பார்க்க முடிகின்றது- தியாகராஜா நிரோஸ்

  • Mar 31, 2025 - 01:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை இராணுவத்தினரைக்கொண்டு அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் […]

செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் அஞ்சல் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெற உள்ளது.

  • Mar 31, 2025 - 11:16 AM
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது. குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதி மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், […]

செய்திகள் முக்கிய செய்திகள்

13 நீதிமன்றங்களில் 47 வழக்குகள் 20 பிடிவிறாந்துகள் 53 வயதுப் பெண் கைது

  • Mar 31, 2025 - 11:09 AM
  • 0 Comments

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரை கைது செய்வதற்கான 20 பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக […]

செய்திகள் முக்கிய செய்திகள்

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக கிண்ணியாவில்; அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம்

  • Mar 31, 2025 - 10:50 AM
  • 0 Comments

நோன்பு பெருநாள் தினமாகிய இன்று அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது. இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டணப் பேரணியில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன் இதனை திருகோணமலை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் அப்பாவி இளைஞனை கைது செய்த பொலிஸார் கொடுக்கும் புதிய விளக்கம்

  • Mar 31, 2025 - 07:22 AM
  • 0 Comments

கொழும்பில் அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களும், பகிரப்படும் செய்திகளும் போலியானவை. குறித்த சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் அவர் கடும்போக்குவாதி என்பது தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (30) அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பணிபுரியும் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது […]

செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டில் சர்வதிகாரம் எழிற்சி பெற்று வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

  • Mar 31, 2025 - 07:11 AM
  • 0 Comments

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று (30-03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், நாடு […]

செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய பிரதமரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி; சூரிய மின்நிலையத் திட்டம் ஆரம்பிக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • Mar 31, 2025 - 07:01 AM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை ஊடாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு அலகு 13 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யும் சாத்தியம் காணப்படும் போது ஏன் 25 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டும். நாங்கள் குறிப்பிடும் தொகைக்கு இணக்கம் தெரிவிக்கும் வரை எந்த ஒப்பந்தத்தையும் கவனத்திற்கொள்ள போவதில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமாக அமையும் வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே ஏற்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை – தெய்யந்தர பகுதியில் நேற்று (30-03) நடைபெற்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட ஆண் குழந்தை மரணம்

  • Mar 30, 2025 - 09:55 PM
  • 0 Comments

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை கடந்த (28.03) அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கஞ்சாவாக மாறிய மன்னார் மாவட்டம் மீண்டும் 18 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்பு

  • Mar 30, 2025 - 06:09 PM
  • 0 Comments

தலைமன்னார் ஊர்மனை பகுதியில் உள்ள காட்டு பகுதியில்18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் நேற்று சனிக்கிழமை (29) மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் தலைமன்னார் ஊர்மனை பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 85 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா பொதிகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா, நகரசபைப் பூங்காவில் சிறுமியின் தங்க சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளனர்

  • Mar 30, 2025 - 05:18 PM
  • 0 Comments

வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த போது அச் சிறுமியின் அருகில் சென்ற இரு பெண்கள் அச் சிறுமியுடன் கதைப்பது போன்று கதைத்து சிறுமி அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp