உள்ளூர் செய்திகள்

ரஜ லுணு அல்ல ஆனையிறவு உப்பு என்பதே சரியான பெயர்- சிறிதரன் எம்பி

  • Mar 30, 2025 - 12:08 AM
  • 0 Comments

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும். 1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் […]

உள்ளூர் செய்திகள்

எதிர்க்கட்சியிலிருந்த போது போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கின்றார்கள்- சஜித் பிரேமதாஸ

  • Mar 30, 2025 - 12:01 AM
  • 0 Comments

எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டங்களை விரட்டியடித்து தாக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2ஃ3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது […]

முக்கிய செய்திகள் விளம்பரம்

மந்திரம் இல்லை மாயா ஜாலம் இல்லை வேலையில்லாப் பிரச்சினைக்கு இதோ தீர்வு

  • Mar 29, 2025 - 06:41 PM
  • 5 Comments

வேலையில்லா(பட்டதாரிகளின்) பிரச்சினைக்கு வருகிறது தீர்வு! வேலையில்லாப் பட்டதாரிகள் என்று வீதியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்போரில் பெரும்பாலானோர் கலைத்துறைப் பட்டதாரிகளே.   கலைத்துறையில் படித்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் முடித்தோருக்கே இந்த நிலை என்றால் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதோரின் நிலை…? பல்கலைக்கழகம் கிடைத்ததோ இல்லையோ தொழில் ஒன்றை உறுதிப்படுத்தும் வகையில் உயர்தரம் கற்கும் காலத்திலேயே மாணவர்களை தயார்ப்படுத்தி வலுவூட்டும் எமது திட்டம் இது. உங்கள் ஆதவையும் மேலதிக கருத்துப் பரிமாற்றங்களையும் எதிர்பார்க்கிறோம்! 15 வருடங்களுக்கு மேற்பட்ட சிகரம் நிறுவனம் ஊடாக […]

விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்

  • Mar 29, 2025 - 05:39 PM
  • 0 Comments

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.    

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

  • Mar 29, 2025 - 05:36 PM
  • 0 Comments

பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த […]

இந்தியா

பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற மத்திய அரசு அனுமதிப்பதில்லையென பிரியங்கா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்

  • Mar 29, 2025 - 05:15 PM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் என்னைக்கூட பேச அனுமதிப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏற்கனவே மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:- பாராளுமன்றத்தில் சில செசன்களில் நான் பார்த்த வரைக்கும், எதிர்க்கட்சிகள் சில கருத்துகள் குறித்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றால் […]

உலகம்

மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 கடந்தள்ளது

  • Mar 29, 2025 - 05:08 PM
  • 0 Comments

மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது. பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் […]

உலகம் வணிகம்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எலான் மஸ்க் அவரே அவருக்கு விற்றுள்ளார்

  • Mar 29, 2025 - 05:02 PM
  • 0 Comments

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான ஓ யுஐ நிறுவனத்துக்கு […]

உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு கிராம சேவையாளர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது

  • Mar 29, 2025 - 04:00 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேக நபரான முன்னாள் கிராம சேவையாளர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேக நபர் கிராம சேவையாளராக இருக்கும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன் போதைப்பொருளுக்கு அடிமையான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது  

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றொரு இளைஞன் படுகாயம்

  • Mar 29, 2025 - 03:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp