உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண்களின் படங்களை நிர்வாணமாக்கிய 20 வயது இளைஞன் விளக்கமறியலில்

  • Apr 3, 2025 - 07:37 AM
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் மாற்றி விநியோகித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் அனுராதபுர துணைப் பிரிவினரால் சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

உலக பணக்காரர் பட்டியல் வரிசையில் எலான் மஸ்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • Apr 3, 2025 - 07:29 AM
  • 0 Comments

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது. தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து பட்டியலில் சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியர்களை கொண்டுள்ளன. 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் முகநூல் ; நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

  • Apr 3, 2025 - 07:21 AM
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் நிறுவப்படவுள்ளது

  • Apr 3, 2025 - 07:16 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென,கடந்த ஜனவரி 31 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கான பிரிட்டனின் தடையை ஆராய அமைச்சரவை குழு நியமனம்

  • Apr 3, 2025 - 07:11 AM
  • 0 Comments

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் […]

உள்ளூர் செய்திகள்

மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் நடை பெற்றது.

  • Apr 3, 2025 - 07:04 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன் நடை பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முன்னை நாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உருவச் சிலைக்கு அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார் உள்ளடங்களாக அருட்சகோதரி,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பான வழக்கில் நடவக்கைகளை நாளை வரை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

  • Apr 2, 2025 - 01:42 PM
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நாளை வியாழக்கிழமை (03-04) வரை மீண்டும் நீடித்துள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இன்று புதன்கிழமை (02-03) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றையதினம் நாளை வியாழக்கிழமை (03-04) வரை நீடித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இஷாரா செவ்வந்தி போல் இருந்ததால் பெண்ணொருவர் கைது

  • Apr 2, 2025 - 12:47 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் […]

இந்தியா செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் வினோத உலகம்

காதல் தோல்வியால் ஆட்டுக்குட்டியை திருமணம் செய்த வாலிபர்

  • Apr 2, 2025 - 07:34 AM
  • 0 Comments

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளார். குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த வினோத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தில் மாலையிட்டு, அதற்கு பொட்டு வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆத்துடன் அந்த ஆட்டிற்கு பூஜா என முன்னாள் காதலியின் பெயரை சூட்டியதுடன் அந்த திருமண புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மனைவியும் மகளும் வேலைக்கு போனதால் குடும்பஸ்த்தர் தற்கொலை

  • Apr 2, 2025 - 07:20 AM
  • 0 Comments

தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும் மனைவியும் வேலைக்கு செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp