உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச சிஐடியில் இருந்து வெளியேறினார்

  • Apr 7, 2025 - 03:46 PM
  • 0 Comments

இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நாமல் ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் சமீபத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், தனது பாட்டி டெய்சி ஆச்சி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் ஆஜர்!

  • Apr 7, 2025 - 03:43 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நள்ளமா? நல்லமா? சாமர சம்பத் தொடர்ந்தும் உள்ளளே தான்

  • Apr 7, 2025 - 02:27 PM
  • 0 Comments

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் செய்திகள்

முஸ்லீம் இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைப்பதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்ட ஆவணம் வெளிவந்தது

  • Apr 7, 2025 - 01:46 PM
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பில் ஸ்டிக்கரினை ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனுமதி வழங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க , முகமட் ருஸ்டி தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு, சமூகங்களிற்கு இடையில்அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குதீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது , பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய செயல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுபவதாகவும் இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை […]

உள்ளூர் செய்திகள்

அனுராதபுரத்தில் முஸ்லீம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு கொலையா தற்கொலையா?

  • Apr 7, 2025 - 01:31 PM
  • 0 Comments

அனுராதபுரம் கெகிராவ பகுதியில் இளம் முஸ்லீம் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். ஆனால் இவ்வாறு தூக்கிட்டு இறக்க வாய்ப்பே இல்லை எனவும் நீதியான விசரனை வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் பொலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளனர்  

உள்ளூர் செய்திகள்

ரணில் கோட்டா அரசில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியினை மட்டக்களப்பிற்கு கொண்டுவந்தேன்- இரா.சாணக்கியன்

  • Apr 7, 2025 - 11:05 AM
  • 0 Comments

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நேற்று (06-04) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக […]

உள்ளூர் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ காசு களவாடல் தொடர்பில் சி.ஐ.டியின் விசாரணையில்

  • Apr 7, 2025 - 10:57 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.

உலகம்

டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி… கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

  • Apr 7, 2025 - 09:05 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, இலங்கைக்கு 44 சதவீத வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார் . அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் வாக்குச் சீட்டுகள் தயாராக உள்ளது

  • Apr 7, 2025 - 08:51 AM
  • 0 Comments

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • Apr 7, 2025 - 08:42 AM
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp