உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

 வவுனியாவில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில்; நடவடிக்கை எடுக்க வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி

  • Apr 9, 2025 - 07:07 AM
  • 0 Comments

2010 – 2011 காலப்பகுதியில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட பதில் காணிகள் காட்டுப்பகுதியை அண்மித்துள்ளதாக உள்ளது. அந்த மக்கள் காட்டு யானைத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08-04) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியாவின் தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி யாழ்ப்பாணம் வந்தடைந்தார்

  • Apr 9, 2025 - 06:56 AM
  • 0 Comments

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி செவ்வாய்க்கிழமை (8) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தபோது அவருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் பூரணகும்பம் வைத்து தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றார். அதனை தொடர்ந்து, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Apr 9, 2025 - 06:40 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பிள்ளையானை கைது செய்தது

  • Apr 8, 2025 - 09:07 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

யாழ். பல்கலை 4ம் வருட சட்டத்துறை மாணவனுக்கு அடிபணிந்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

  • Apr 8, 2025 - 09:17 AM
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நான்காம் வருட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டமைக்கு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமனங்களுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த மாணவனின் தரப்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீளப்பெறப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மாணவன் மீதான குற்றச்சாட்டுப் […]

உள்ளூர் செய்திகள்

குருணாகல், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு,

  • Apr 8, 2025 - 08:52 AM
  • 0 Comments

குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிவு இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதனை உடன நிறுத்தவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்

  • Apr 7, 2025 - 08:31 PM
  • 0 Comments

இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும், என வேண்டுகோள்விடுத்துள்ளது. நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டதில் சிறைப்படுத்தப்பட்ட மொஹமட் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார்

  • Apr 7, 2025 - 05:53 PM
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய நிலையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

முஸ்லீம் இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புகாவலில் வைப்பதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்ட ஆவணம் வெளிவந்தது

  • Apr 7, 2025 - 05:50 PM
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கொழும்பில் ஸ்டிக்கரினை ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனுமதி வழங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க , முகமட் ருஸ்டி தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு, சமூகங்களிற்கு இடையில்அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்குதீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது , பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய செயல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுபவதாகவும் இதன் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • Apr 7, 2025 - 05:09 PM
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp