உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். வந்த பிரதமர் தேர்தல் சட்டங்களையும் மீறி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பக்தர்களையும் குழப்பியதாக சிறிகாந்தா குற்றச்சாட்டு

  • Apr 12, 2025 - 04:14 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் என மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • Apr 12, 2025 - 04:02 PM
  • 0 Comments

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய மக்கள் சக்தியே முன்னெடுத்து வந்தது. இன்று முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று முதன் முறையாக விஜயம் […]

உள்ளூர் செய்திகள்

பிள்ளையானை 3 மாதங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

  • Apr 12, 2025 - 03:50 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08-04) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் தெரிவிப்பு

  • Apr 12, 2025 - 08:00 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார். 06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலை நடத்த தமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். அனைவரையும் பிரதிநிதித்துவப்படும் அரசாங்கமே தற்போது உள்ளதாகவும் இம்முறை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு மக்களே காரண கர்த்தாக்கள் எனவும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றும்- சிறீதரன் எம்.பி நம்பிக்கை

  • Apr 12, 2025 - 07:29 AM
  • 0 Comments

அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும். அத்தகைய சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை இம்முறையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில், கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அக்கராயன் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரை […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள முக்கிய அங்கீகாரம்

  • Apr 11, 2025 - 02:08 PM
  • 0 Comments

இலங்கை ஏதிலிகளுக்கு தமிழக அரசு வழங்கிய அடையாள அட்டையை வாகனப் பதிவுக்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் ஏதிலிகள் வைத்திருக்கும் அடையாள அட்டைகளை மோட்டார் வாகனப் பதிவுக்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்வதென்று, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையாளர், பிராந்திய போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதன்படி, வாகனப் பதிவு செய்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக தமிழக அரசால் வழங்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதி மீறினால் அபராதத்தை இணையவழியில் இன்று தொடக்கம் செலுத்தலாம்

  • Apr 11, 2025 - 01:49 PM
  • 0 Comments

போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக காவல்துறை போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் புழுஏPயுலு செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிசமைக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் காவல்துறையினரால் விடுவிக்கப்படும். போக்குவரத்து விதி மீறினால் அபராதத்தை இணையவழியில் இன்று தொடக்கம் செலுத்தலாம் போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று குறிப்பிட்ட சில […]

உள்ளூர் செய்திகள்

உலக பொருளாதார ஒட்டமானது இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும்- ஐ.எம்.எப்

  • Apr 11, 2025 - 01:34 PM
  • 0 Comments

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான் பபாஜியோர்ஜியோ தலைமையிலான குழு இந்தக் கருத்தை வெளியிட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் மற்றும் சமீபத்திய பேரண்ட பொருளாதார […]

உள்ளூர் செய்திகள்

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கையொப்பமிட்டுள்ளார்

  • Apr 11, 2025 - 01:23 PM
  • 0 Comments

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு நேற்று (10-04) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025ஆம் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp