உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை கொலைகாரர்களால் ஆட்சி செய்யப்படும் நாடாக மாறியுள்ளது – சஜித்

  • Apr 27, 2025 - 12:41 AM
  • 0 Comments

தற்போது நாடு கொலைகாரர்கள், கொள்ளையர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் என அனைவராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீதிகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் கொலைகள் இடம்பெறுகின்றன. கொலைகாரர்களால் ஆட்சி செய்யப்படும் நாடாக இலங்கை மாறியுள்ளது. நாட்டில் முறையாக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதாகக் கூறியவருக்கே தற்போது வகுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த […]

விளையாட்டு

மொஹமட் ஷமியின் புதிய சாதனை!

  • Apr 27, 2025 - 12:35 AM
  • 0 Comments

ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட்டினை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மொஹமட் ஷமி படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது, ஷேக் ரஷீடை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார். இதன்படி மொஹமட் ஷமி இதுவரை 4 முறை ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட், பிரவீன் குமார், லசித் மாலிங்க மற்றும் புவனேஸ்வர் […]

செய்திகள்

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • Apr 27, 2025 - 12:30 AM
  • 0 Comments

இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மாத்திரம் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை […]

உலகம்

ஈரான் துறைமுகத்தில் வெடிப்பு சம்பவம் – 4 பேர் பலி

  • Apr 27, 2025 - 12:24 AM
  • 0 Comments

தெற்கு ஈரானின் பந்தார் அப்பாஸில் உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் […]

உள்ளூர் செய்திகள்

80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

  • Apr 27, 2025 - 12:20 AM
  • 0 Comments

கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 13 கிலோ 372 கிராம் ஹெராயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதானவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டிகாவத்தை நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று போதைப்பொருள் விநியோக நிலையமாக இயங்கி வருவதாக மாலபே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • Apr 27, 2025 - 12:13 AM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. http://www.doenets.lk அல்லது http://www.results.exams.gov.lkஎன்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. இந்த பரீட்சைக்கு மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் […]

உள்ளூர் செய்திகள்

இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்- ஜனாதிபதி.

  • Apr 27, 2025 - 12:06 AM
  • 0 Comments

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போரின் போது அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் உதவும் என்றும், போரின் போது மூடப்பட்ட கிளிநொச்சி பகுதியில் உள்ள வீதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

  • Apr 25, 2025 - 10:49 PM
  • 0 Comments

20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில், வீட்டின் உரிமையாளரான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நாளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  • Apr 25, 2025 - 08:57 PM
  • 0 Comments

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. மின்னல் மற்றும் இடி ஏற்படும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!

  • Apr 25, 2025 - 08:44 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ். புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அண்மையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த யுவதியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைது செய்து ,விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp