உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டத்தின் மூலம் மாத்திரம் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது-ஜனாதிபதி

  • Apr 25, 2025 - 08:30 PM
  • 0 Comments

உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் நாட்டில் இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை மீண்டும் நிலைநிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள ரஜமகா விஹாரையில் இன்று (25) பிற்பகல் தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

  • Apr 25, 2025 - 08:17 PM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். இதில் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் […]

உள்ளூர் செய்திகள்

நாட்டில் மிருகத்தனமும் வன்முறையும் பரவியுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்!

  • Apr 25, 2025 - 08:02 PM
  • 0 Comments

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்து, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்வும் இன்று இல்லை. குண்டர்கள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்களின் பிடியில் சமூகம் சிக்கியுள்ளது. மிருகத்தனமும் வன்முறையும் பரவியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பு குறித்து டியுஷன் வகுப்புகள் எடுக்கிறோம் வாருங்கள் என கூறி பெருமையடித்த இந்த அரசு, இன்று பாதுகாப்பு குறித்து டியுஷன் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இன்றுவரை 429 முறைப்பாடுகள் பதிவு!

  • Apr 24, 2025 - 08:01 PM
  • 0 Comments

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த முறைப்பாடுகளில் 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்களும் 98 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 23 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தலைக்கவசம் பயன்படுத்துவோருக்கு எழுந்துள்ள புதிய நெருக்கடி!

  • Apr 24, 2025 - 07:43 PM
  • 0 Comments

மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருந்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டாலோ யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரையும் அவரது உடைமைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணிபவர்களால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பொலிஸ் தலைமையகத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் தலைக்கவசம் அணிந்தவர்களால் செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புக்காக மோட்டார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

  • Apr 23, 2025 - 06:47 PM
  • 0 Comments

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

74 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் கைது

  • Apr 23, 2025 - 05:51 PM
  • 0 Comments

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு’, ‘கைது செய் போதை குற்றவாளியை கைது செய்’, ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது

  • Apr 23, 2025 - 04:13 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 14 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூர் செய்திகள்

மொனராகலையில் ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் மீட்பு சந்தேகநபர் கைது !

  • Apr 23, 2025 - 04:03 PM
  • 0 Comments

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 வு56 வெடிமருந்துகள், 03 வு56 வெடிமருந்துகள், 01 ஆ16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த […]

உள்ளூர் செய்திகள்

மன்னார் கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகுசேவைக்கு அனுமதி

  • Apr 23, 2025 - 02:57 PM
  • 0 Comments

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மணற்திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (22-04) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்தநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp