உள்ளூர் செய்திகள்

ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது சாதகமாக பரிசீலிக்கப்படுகின்றது

  • Apr 30, 2025 - 03:51 PM
  • 0 Comments

ஜி.எஸ்.பி மதிப்பாய்வு நேர்மறையாக பரிசீலிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவு பிரதானி சார்லஸ் வைட்லி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வைட்லி இவ்வாறு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு பல வணிக சாதனைகளை அடைய உதவியுள்ளது என்றும், மேலும் வணிக சாதனைகளை அடைவதில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அடுத்த மாதம் அகழ்வுக்குட்படுத்தப்படுமென சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவிப்பு

  • Apr 30, 2025 - 02:25 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்று (29-04) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்துகொண்டனர். […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு

  • Apr 29, 2025 - 12:56 PM
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28-04) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து […]

உள்ளூர் செய்திகள்

ஆனந்தசங்கரியின் மகன் கரி ஆனந்தசங்கரி கனடா தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்

  • Apr 29, 2025 - 12:47 PM
  • 0 Comments

கனடா தேர்தல் – வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது- 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கனடிய பிரதிநிதிகளிற்கும் கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள் 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்கு கனடிய தமிழர் பேரவை தனது […]

விளையாட்டு

வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா அணி நாளை டெல்லியை சந்திக்கின்றது

  • Apr 28, 2025 - 08:51 PM
  • 0 Comments

ஐ.பி.எல் போட்டியின் 48-வது லீக் ஆட்டம் டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 7 […]

இந்தியா

63 கோடி ரூபா மதிப்பில் 26 போர் விமானங்கள் இறக்க பிரான்ஸ் – இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்து

  • Apr 28, 2025 - 05:49 PM
  • 0 Comments

இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் வாங்கிய நிலையில் தற்போது ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது. தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. […]

உலகம்

இந்திய பாகிஸ்தான் முறுகலில் சீனா பாக்கிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

  • Apr 28, 2025 - 05:37 PM
  • 0 Comments

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்விகளுக்காக இந்தியா பாகிஸ்தான் மீது பழிபோடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும் பஹல்காம் விவகாரத்தில் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார் தொலைபேசி வாயிலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், […]

உலகம்

உக்ரைன் போரில் ரஷியாவுடன் கைகோர்த்துள்ள வட கொரியாவுக்கு புட்டின் நன்றி தெரிவிப்பு

  • Apr 28, 2025 - 04:47 PM
  • 0 Comments

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புகார் கூறினார். இந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பு மேல் நீதிமன்றம் 5 பேரூக்கு மரண தண்டனை விதித்துள்ளது

  • Apr 28, 2025 - 04:20 PM
  • 0 Comments

2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதே குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மேலும் இரண்டு பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றம் நடந்த போது இரண்டு பிரதிவாதிகளும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்துள்ளார். நீண்ட விசாரணைக்குப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • Apr 28, 2025 - 04:09 PM
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp