உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது..!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள “தயா லிக்கர் ஷாப் ” (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன.
அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சாரதியின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமானதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1490394699208665

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp