உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்ட்டுள்ளது

  • May 5, 2025 - 01:18 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுள்ளன. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.  

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025 - 12:57 PM
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

  • May 5, 2025 - 12:52 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டன. நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ளு.முரளிதரன் , உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராசா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

  • May 5, 2025 - 12:48 PM
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான், முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 […]

உள்ளூர் செய்திகள்

யாழ் ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது

  • May 5, 2025 - 12:43 PM
  • 0 Comments

ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இரு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுப்படவுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) […]

உள்ளூர்

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

  • May 5, 2025 - 02:31 AM
  • 0 Comments

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க இதனைக் குறிப்பிட்டார். உலகளாவிய ரீதியில், ஒரு இலட்சம் பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக அறிய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே […]

உள்ளூர்

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!

  • May 5, 2025 - 02:19 AM
  • 0 Comments

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிள் ஆவார். ஞாயிற்றுக்கிழமை (04) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொழுது மயக்கம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார  வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர்  மரணம் அடைந்துள்ளார். இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண […]

உள்ளூர்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் யாழில் கள ஆய்வு!

  • May 5, 2025 - 02:13 AM
  • 0 Comments

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்இ மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ் மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் கள ஆய்வை மேற்கொண்டார். இதன்போதுஇ யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார். இக் கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள்இ போக்குவரத்துஇ பொது வசதிகள்இ நலனோன்பு வசதிகள்இ மின்சார […]

உள்ளூர்

சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் விளையாடக்கூடாது-ரணில்

  • May 5, 2025 - 02:06 AM
  • 0 Comments

சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் விளையாடக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டுக்கு சென்ற எந்த சந்தர்ப்பத்திலும், நாட்டிற்கு எதிராக பேசவோ செயல்படவோ செய்ததில்லை என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு 7-ல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: ‘சர்வதேச நாணய நிதியம் – நான்காவது […]

முக்கிய செய்திகள்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: தேர்தல் வேட்பாளர் மருத்துவமனையில்!

  • May 5, 2025 - 02:01 AM
  • 0 Comments

களுத்துறை, நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதையும் படியுங்கள்>வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர்- ஜனாதிபதி விசேட சந்திப்பு!

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp