உள்ளூர் செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

  • May 6, 2025 - 04:50 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சத வீத வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தி 60 சத வீத வாக்குப் பதிவுகளும் களுத்துறை […]

உள்ளூர் செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது

  • May 6, 2025 - 04:33 PM
  • 0 Comments

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன அதன்படி, இந்தத் தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்குப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்தில் வாள்களுடன் இளைஞர்கள்

  • May 6, 2025 - 03:51 PM
  • 0 Comments

கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று பகல் 01.00 மணியளவில் செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது காரினுள் இருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில்  இளைஞர் சடலமாக மீட்பு

  • May 6, 2025 - 03:18 PM
  • 0 Comments

கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே நேற்று மாலை 6:00 மணியளவில் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இறப்புக்காரணம் இதுவரை அறியப்படவில்லை, சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

பிரதமரை ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சந்தித்தார்

  • May 6, 2025 - 03:09 PM
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புளுP10 கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் “Clean Sri Lanka” திட்டம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடலின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார்

  • May 6, 2025 - 02:45 PM
  • 0 Comments

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மதியம் 1.00 மணிவரை 34 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது

  • May 6, 2025 - 02:24 PM
  • 0 Comments

இன்று மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40மூ ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, மன்னார் – 47 வீதம் பதுளை – 48வீதம் மொனராகலை – 43வீதம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரதமரின் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கேள்வி

  • May 6, 2025 - 02:00 PM
  • 0 Comments

அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும் என தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது மே3 ம் திகதி அமைதிக்காலம் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களிற்கான பிரச்சாரங்களில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்தார். இது தேர்தல்விதிமுறைகளை நேரடியாக மீறும் செயலாகும். இது குறித்து தேர்தல் […]

உள்ளூர் செய்திகள்

மாவட்ட ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நண்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

  • May 6, 2025 - 01:33 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் நண்பகல் 12 மணி வரை நிலைவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 33 சத வீத வாக்குப் பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 31 சத வீத வாக்குப் பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 30 சத வீத வாக்குப் பதிவுகளும் அநுராதபுரம் மாவட்டத்தில் 30 சத […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பில் இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

  • May 6, 2025 - 01:23 PM
  • 0 Comments

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது. வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp