உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

12 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி தப்பிச் சென்ற பெண்! – யாழில் சம்பவம்

  • Apr 23, 2025 - 06:47 PM
  • 0 Comments

பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சம்பவம் வட்டுக்கோட்டையில் நேற்று (22-04) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு 12 வயதான அப்பாடசாலையின் மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் தான் சென்றுகொண்டிருந்தபோது தனக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

74 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் கைது

  • Apr 23, 2025 - 05:51 PM
  • 0 Comments

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு’, ‘கைது செய் போதை குற்றவாளியை கைது செய்’, ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது

  • Apr 23, 2025 - 04:13 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 14 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூர் செய்திகள்

மொனராகலையில் ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் மீட்பு சந்தேகநபர் கைது !

  • Apr 23, 2025 - 04:03 PM
  • 0 Comments

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 வு56 வெடிமருந்துகள், 03 வு56 வெடிமருந்துகள், 01 ஆ16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த […]

உள்ளூர் செய்திகள்

மன்னார் கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகுசேவைக்கு அனுமதி

  • Apr 23, 2025 - 02:57 PM
  • 0 Comments

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மணற்திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (22-04) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்தநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் […]

உள்ளூர் செய்திகள்

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்ய இராணுவத்தினர் இடையூறாக இருக்கின்றனர் – வடக்கு ஆளுநர் ஒப்புதல்

  • Apr 23, 2025 - 02:49 PM
  • 0 Comments

விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22-04) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், […]

உள்ளூர் செய்திகள்

டொன் பிரியசாத் கொலை சந்தேக நபர்கள் மூவர் கைது

  • Apr 23, 2025 - 02:21 PM
  • 0 Comments

அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, டொன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த காஞ்சிபான இம்ரானின் சகாக்கள் செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று (22-04) டொன் பிரியசாத், வெல்லம்பிட்டியிலுள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹான்ஸ் கோபர் உருவாக்கிய பூந்தொட்டி 56 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை!

  • Apr 22, 2025 - 10:07 PM
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டில் உடைந்த பூந்தொட்டி ஒன்று 56 லட்சம் ரூபாவிற்கு (இந்திய ரூபாய் மதிப்பில்) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு தோட்டத்தில் உடைந்த நிலையில் 4 அடி உயரமுள்ள பூந்தொட்டி ஒன்று இருந்துள்ளது. அந்தப் பூந்தொட்டியானது ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற செராமிக் கலைஞரான ஹான்ஸ் கோபர் என்பவரால் உருவாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அப்பூந்தொட்டி ஏலத்துக்கு விடப்பட்டது. துவக்கத்தில், 6 லட்சம் முதல் 11 லட்சம் ரூபா […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

  • Apr 22, 2025 - 09:36 PM
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் பலி!

  • Apr 22, 2025 - 09:07 PM
  • 0 Comments

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் இன்று மாலை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp