உள்ளூர் செய்திகள்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ‘வேரிலிருந்து விழுது வரை’ நடைபவனி

  • Apr 21, 2025 - 05:53 PM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘வேரிலிருந்து விழுது வரை’ ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்று முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்திய நிலையில், வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் நடைபவனி இடம்பெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தந்தை காலமானார்

  • Apr 21, 2025 - 01:58 PM
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந் நிலையில் லைத்தியசாலையிலிருந்து இருப்பிடம் திரும்பிய அவர் ஓய்நிலையில் இருந்த போதே அவர் காலமானார்  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசாங்கம் அரசியல் இலாபமீட்டுவதற்காக பயன்படுத்துகின்றது – நாமல்

  • Apr 21, 2025 - 01:27 PM
  • 0 Comments

உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்தஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும்,பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள […]

உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவில் அனல் பறக்கும் வெயிலிலும் மீனவர்கள் போராட்டம்

  • Apr 21, 2025 - 01:21 PM
  • 0 Comments

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ”அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட […]

உள்ளூர் செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ரீட் மனுக்கள் நிராகரிப்பு

  • Apr 21, 2025 - 01:09 PM
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இருபது ரீட் மனுக்களை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் சார்பில் நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு சுயாதீன வழக்குரைஞர் குழு அவசியமென கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

  • Apr 21, 2025 - 12:48 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்காக சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கொலை செய்யும் கூலிப்படைகள் இல்லாத வெள்ளை வான்கள் இல்லாத சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இல்லாத புதிய சமூகமொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு அன்று நிலவிய அரசியல்கலாச்சாரமே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கோயிலில் பெண் வேடமிட்டு சங்கிலி அறுத்த ஆண் உட்பட நால்வர் கைது!

  • Apr 20, 2025 - 11:27 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் […]

செய்திகள் முக்கிய செய்திகள் வினோத உலகம்

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

  • Apr 20, 2025 - 11:10 PM
  • 0 Comments

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம்!

  • Apr 20, 2025 - 10:56 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கையளிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

  • Apr 20, 2025 - 10:38 PM
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்! https://www.youtube.com/@pathivunews/videos

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp