கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(23.04.2026) இரத்த தான முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மனிதாபிமானப் பணியாகக் கருதப்படும் இந்நிகழ்வில்,மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள்,ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தியது.
அவசர நிலைகளில் உயிர்களை காப்பாற்றுவதற்கு இத்தகைய தானங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட செயலகத்தினால் பாராட்டுக் கடிதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வை சிறப்பாக ஒழுங்குபடுத்திய ஊழியர் நலன்புரிச் சங்கத்தினருக்கும், மருத்துவ குழுவினருக்கும், மேலும் தங்களின் அரிய குருதிக்கொடையை வழங்கிய அனைத்து தானதாரர்களுக்கும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ் அவர்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

What’s your Reaction?
