உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிசோரின் பதவி பறிப்பை கண்டித்து சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்..!

kishore removal chavakachcheri protest | Pathivu News
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் , சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் , சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் , சுரேஷ் பிரேமசந்திரன் , சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1644834276584093
Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp