இலங்கையின் போர் குற்றவாளிகளிற்கு தடை விதித்தமையால் திருப்தியடைவதாக பிரிட்டிஸ் பிரதமர் தெரிவிப்பு
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில்யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூருவதற்காக இலங்கையிலும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்றுதிரள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களையும், நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்,அந்த அநீதிகளின் கொடுமைகளின் பாதிப்புகள் நினைவுகளுடன் வாழும் உயிர் பிழைத்தவர்கள் அன்புக்குரியவர்களுடன் […]









