உள்ளூர் செய்திகள்

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • May 15, 2025 - 03:45 PM
  • 0 Comments

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் பெண் மர்ம மரணம்

  • May 15, 2025 - 02:29 PM
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, 1ஆம் வட்டாரத்தில் உள்ள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

  • May 15, 2025 - 01:50 PM
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய […]

உள்ளூர் செய்திகள்

தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் வவுனியாவில் சந்திப்பு

  • May 15, 2025 - 12:36 PM
  • 0 Comments

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று  நடைபெறுகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோகம் நடைப்பெற்றால் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்

  • May 14, 2025 - 02:09 PM
  • 0 Comments

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும். எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

  • May 14, 2025 - 01:07 PM
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், உலகளவிலும் மற்றும் இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாகக் குறைந்தன. கடந்த மே 12ஆம் திகதி உலகளாவிய தங்கத்தின் விலைகள் மூன்று வீதத்திற்கு அதிகமாகக் குறைந்தன, இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் சரிவைக் குறிக்கிறது. கட்டணங்களைக் குறைப்பதற்கான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 90 நாள் ஒப்பந்தத்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வரிகள் 145 வீதத்தில் இருந்து 30 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்.பியின் பதவி தொடர்பிலான மனு ஜூன் 26 ம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது

  • May 14, 2025 - 01:00 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதிப்படுத்த ஜூன் 26 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி, உண்மைகளை உறுதிப்படுத்த, குறித்த மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த மனுவை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடமராட்சி உடுத்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு

  • May 14, 2025 - 12:52 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதான முன்றலில் நேற்று (13-05) மாலை முன்னெடுக்கப்பட்டது. இதில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன், பிரதேச சபை உறுபரபினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கஜேந்திரகுமாiர் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்

  • May 14, 2025 - 12:46 PM
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து […]

உள்ளூர் செய்திகள்

பிரம்டன் இனப்படுகொலை நினைவகம் நிறுவியதால் நித்திரையிழந்த மகிந்தவின் புத்தா நாமல்

  • May 14, 2025 - 12:40 PM
  • 0 Comments

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp