உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சேற்றில் விழுந்த இளைஞர் மர்மமான நிலையில் உயிரிழப்பு

  • May 19, 2025 - 02:04 PM
  • 0 Comments

யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி இளைஞரின் வீட்டார் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் சகோதரன் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை (17-05) வீட்டில் மது விருந்து நடைபெற்று முடிந்த நிலையில் வெளியில் சென்ற இளைஞர் சேற்றில் விழுந்து உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை […]

உள்ளூர் செய்திகள்

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் மனிதகுலத்திற்கெதிராக செய்த குற்றங்களுக்காக பதில் சொல்லும் நாளை எதிர்பார்க்கின்றோம் – பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

  • May 19, 2025 - 01:55 PM
  • 0 Comments

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச் செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்ட யுத்தத்தின் 16வது வருட நிறைவை நினைவுகூருகின்றோம். உயிர் தப்பிய பலர் கனடாவிற்கு பாதுகாப்பிற்காக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தடையால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லையென – சவேந்திரசில்வா கவலை

  • May 19, 2025 - 01:40 PM
  • 0 Comments

2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும்,இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி , விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திரசில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திரசில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ராஜபக்ச அரசாங்கத்தின் போர் குற்றங்களை ஒரு போதும் மறத்தலாதென கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் தெரிவிப்பு

  • May 19, 2025 - 01:25 PM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர் ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள். தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்தது தமிழன அழிப்பு நினைவு தூபிகள்

  • May 18, 2025 - 09:14 AM
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தமிழின அழிப்பின அடையாளமான முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று சனிக்கிழமை (17-05) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் […]

உள்ளூர் செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்காலில்

  • May 18, 2025 - 09:08 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த […]

உள்ளூர் செய்திகள்

இன்று முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடகிழக்கெங்கும் உணர்வெழுச்சியுடன்….

  • May 18, 2025 - 08:31 AM
  • 0 Comments

2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறையும் 16ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 10.15இற்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டுரூபவ் 10.29இற்கு நினைவொலி எழுப்பப்படும். 10.30இற்கு அகவணக்கம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வட, கிழக்கில் ஜேவிபி அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்கக்கூடாது – தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி பேச்சு

  • May 17, 2025 - 02:34 PM
  • 0 Comments

வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில், அச்சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டுமென கட்சியின் அரசியல்குழுக் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் யுத்தம் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசிய மென்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

  • May 17, 2025 - 02:28 PM
  • 0 Comments

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்’ எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில் மீள புதுப்பிக்கப்படவேண்டும். இசைப்பிரியா போன்ற பெண்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அச்செயற்றிட்டம் தொடரவேண்டியது மிக அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 16 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனை முன்னிட்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களுக்கான கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுவீடனில் சாணக்கியன் தெரிவிப்பு

  • May 17, 2025 - 02:24 PM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். சுவீடன் ஸ்டாக்ஹோமில் 12ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற ‘அமைதி மற்றும் மேம்பாட்டு மன்றம் 2025’ என்னும் கருத்தரங்கில் விசேட அழைப்பின் பெயரில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இலங்கையின் பிரச்சினை ஆய்வு மற்றும் கூட்டு […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp