உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 4 சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டியிடுவதென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

  • May 14, 2025 - 12:33 PM
  • 0 Comments

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை இனப்படுகொலை நடைபெறவில்லையென அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

  • May 14, 2025 - 12:25 PM
  • 0 Comments

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் […]

உள்ளூர் செய்திகள்

குமுதினி படகு படுகொலை 40; ஆண்டுகள் நகர்ந்தது நினைவேந்தும் உறவுகள்

  • May 14, 2025 - 12:17 PM
  • 0 Comments

குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம் மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. 1985.05.15 அன்று காலை பல கனவுகளுடன் நெடுந்தீவில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்தது பேரானந்தமென்கிறார் தென்னிந்திய நடிகர் எம்.எஸ் பாஸ்கர்

  • May 12, 2025 - 02:46 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில் , யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் ‘கர்மா’ எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த எம். எஸ் பாஸ்கர் , யாழ். ஊடக சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து 42 நாட் […]

உள்ளூர் செய்திகள்

தமிழின அழிப்பு வாரம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது

  • May 12, 2025 - 02:38 PM
  • 0 Comments

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே நடந்துகொள்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அன்னையர் தினமான நேற்று தன்னுயிர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய தாய்- நெகிழ்ச்சி சம்பவம்

  • May 12, 2025 - 02:04 PM
  • 0 Comments

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் நேற்று (11-05) அதிகாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய 45 வயதுடைய தாய் பின்னர் உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் தொடரூந்து மோதி ஒருவர் உயிரிழப்பு;

  • May 12, 2025 - 01:54 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து பளை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பளை பகுதியில் இடம்பெற்றது. யாழில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந்த புகையிரதம், பளை சந்தியில் ஓர் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் […]

உள்ளூர் செய்திகள்

பொருளாதார போரை வெல்லவும் உலகின் போரை வெல்லவும் புத்தரின் மார்க்கத்தில் வழியுண்டு -எதிர்க்கட்சி தலைவர் சஜித்

  • May 12, 2025 - 01:46 PM
  • 0 Comments

இலங்கையும், முழு உலகமும் இந்த நேரத்தில் பொருளாதார போரையும், அமைதி தொடர்பான சவாலையும் எதிர்கொண்டுள்ளன. இந்த சவால்களை வெல்ல புத்தர் காட்டிய தம்ம மார்க்கத்தில் தெளிவான தீர்வுகள் உள்ளன என வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும்போது, பௌத்த தத்துவம் காட்டும் காரண-விளைவு அறத்தை நன்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசை நாயகனை கூறிய ஆயுதத்தால் குத்திக்கொன்ற காதலி- கொழும்பில் சம்பவம்

  • May 12, 2025 - 01:37 PM
  • 0 Comments

வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (11-05) பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் நபரொருவர் காயமடைந்த நிலையில், வீழ்ந்து கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை மீட்டு, பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில்; திருமணமாகி ஒரு மாதத்தில் விதவையான மனைவி

  • May 12, 2025 - 01:30 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கடந்த சனிக்கிழமை (10-05) உறவனர் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp