தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியானது நீதிக்கும் உண்மைக்குமான தொடர் பயணத்தின் அடையாளம் என்கிறது கனடிய தமிழர் பேரவை
கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்ப்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு (10.05.2025) இடம்பெற்றிருந்தது. இலங்கையின் யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நிலைவாலயத்தை கனடிய தமிழர் பேரவை ஆதரிக்கின்றது. உலகம் முழுவதும் தமிழர்களுக்கான நினைவேந்தலின் மாதமாக அமைந்துள்ள மே மாதத்தை […]









