உள்ளூர் செய்திகள்

கல்கிசையில் இளைஞனை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரி கைது

  • May 19, 2025 - 05:47 PM
  • 0 Comments

அண்மையில் கல்கிசையில் 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய இருவர் உட்பட மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உள்ளூர்வாசிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி வசம் இருந்த ஒரு கைக்குண்டு மற்றும் ஒன்பது மிமீ துப்பாக்கியின் 15 தோட்டாக்கள், ஒரு மோட்டார் […]

உலகம் செய்திகள்

பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது

  • May 19, 2025 - 05:27 PM
  • 0 Comments

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110 கோடி டாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு 2வது தவணையாக 8,670 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை […]

உலகம் செய்திகள்

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.

  • May 19, 2025 - 05:14 PM
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில், காசா போர்நிறுத்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வை காணாமல் வெற்றிக் கொண்டாட்டமா? – மனோ கணேசன் கேள்வி

  • May 19, 2025 - 04:50 PM
  • 0 Comments

இலங்கையின் அனைத்து மக்களும் இறந்துபோன தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஓர் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டங்களையும் கூட கொண்டாடலாம். ஆனால், இந்த இலக்கை அடைய இலங்கை, முப்பது வருட யுத்தம் நிகழ்ந்தமைக்கான மூல காரணங்களை தேடியறிந்து அவற்றுக்குத் தீர்வு தேட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார […]

உள்ளூர் செய்திகள்

சிறிதரனுக்கு வாலையும் சுமந்திரனுக்கு தலையையும் காட்டும் சீ. வி.கே சிவஞானம்

  • May 19, 2025 - 04:40 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்சியின் பொதுசெயலாளராக சுமந்திரனை ஏற்றுக்கொள்ளவில்லையென கூறியதில் தவறில்லை அது அவரின் கருத்து என இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார் யாப்பின்படியே தெரிவு நடைபெற்றுள்ளது. இதனை தேர்தல் திணைக்களம் ஏற்றுகொண்டுள்ளது என தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமம் தொடர்பில் சில […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

30 வருட யுத்தத்தில் ஊனமற்று சிகிச்சை பெறும் படையினரை ஜனாதிபதி இன்று சந்தித்தார்

  • May 19, 2025 - 03:14 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்குள்ள படையினர் வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார். முப்பது வருட யுத்த சூழ்நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாலசந்திரன் இன்றும் உயிர்வாழ்கின்றான், என்றென்றும் உயிர்வாழ்வான்- நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

  • May 19, 2025 - 03:00 PM
  • 0 Comments

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங்தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப்பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது. பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன் இந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மறை மாவட்ட ஓய்வு பெற்ற ஆயர் நிரந்தரமாக இளைப்பாறினார்

  • May 19, 2025 - 02:42 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இன்று இறைவனடி சேர்ந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று 74 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார். கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். அன்னார் புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சிகள் உடன்பாடு

  • May 19, 2025 - 02:19 PM
  • 0 Comments

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான கொள்கைகள் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஒரு பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டதாக அந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றி அறிக்கையினை மன்றில் சமர்பிக் நீதிமன்றம் உத்தரவு

  • May 19, 2025 - 02:14 PM
  • 0 Comments

சமீபத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp