முல்லைத்தீவு விபத்தில் 8 வயதுடைய பாடசாலை மாணவி பலி
முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. […]









