உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கே பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

  • May 22, 2025 - 01:38 PM
  • 0 Comments

சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ‘சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நல்லூர் ஆலயத்தருகில் அமைக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகையை மாநகர சபை அதிரடியாக அகற்றியது

  • May 22, 2025 - 01:28 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழப்பாணத்தில் தங்கையை கடத்திய அண்ணனுக்கு வலை வீசியுள்ள பொலிஸார்

  • May 22, 2025 - 01:08 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று (21-05) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு […]

உள்ளூர் செய்திகள்

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையாவிட்டால் பொருளாதார சுனாமியில் சிக்குமென சஜித் எச்செரிக்கை

  • May 22, 2025 - 06:43 AM
  • 0 Comments

ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் தொடங்கிய தொழிற்சாலை இன்று முற்றிலும் மூடப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் 2028 முதல் நாட்டின் கடனை திரும்ப செலுத்த 5மூ பொருளாதார வளர்ச்சி விகிதம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிதிச் சட்ட கட்டளைகள் மீதான விவாதத்தில் தெரிவித்தார். தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவதை கணக்கில் கொண்டு, 5மூ வளர்ச்சியை அடைவது கடினம் என்ற அவர், இவ்வாறு வளர்ச்சி விகிதம் நிலைநிறுத்தப்படவில்லை […]

உள்ளூர் செய்திகள்

நீதிமன்றத்தின் நடவடிக்கையையே சட்டவிரோதமானதென்கிறார் ரிஷாத் பதியுதீன் எம்பி.

  • May 22, 2025 - 06:21 AM
  • 0 Comments

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், 100 ஆண்டுகள் பழமையான மன்னார்-புத்தளம் பாதையை மூடுவதற்கான நீதிமன்றத்தின் நடவடிக்கையை சட்டவிரோதமானதாகக் கூறி, இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார். புதன்கிழமை (21) பாராளுமன்றத்தில் நிதி சட்டத்திற்கான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இந்த பாதை எந்தவொரு பிரதேசத்திலும் இருந்திருந்தால் சட்டமன்ற அதிகாரிகள் அதை மூட வலியுறுத்தப்படமாட்டார்கள் என்றும், குறிப்பிட்டார். அவர் மேலும், உள்ளூர் ஆட்சிப் பொறுப்புகள் தொடர்பான தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் […]

உள்ளூர் செய்திகள்

தமிழின அழிப்பு நினைவகமானது காலத்திற்கேற்ற அறப்பணியென கனேடிய உயர்ஸ்தானிகரிடம் சிறிதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்

  • May 22, 2025 - 06:12 AM
  • 0 Comments

கனடாவின் பிரம்டன் நகரில் ஈழத்தமிழர்களுக்கான இனப்படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டமை, காலப்பெறுமதி மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். இதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், கனடிய உயர்ஸ்தானியர் எரிக் வோல்ஷிடம், தமிழர் சார்பில் கனடிய அரசுக்கு நன்றிய்கூறினார். இதுகுறித்து சிறிதரன், புதன்கிழமை (மே 21) கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானியரகத்தில் நடைபெற்ற சந்திப்பில், கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பாட்டிரிக் பிரவுனுக்கு எழுதிய நன்றி கடிதத்தையும் உயர்ஸ்தானியரிடம் நேரில் கையளித்தார். […]

உள்ளூர் செய்திகள்

வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற பிரதமரை வலியுறுத்தவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

  • May 22, 2025 - 05:58 AM
  • 0 Comments

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் […]

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை அறுவை சிகிச்சைசெய்து சாதனை

  • May 21, 2025 - 03:02 PM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் வைத்தியதுறையின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம் மற்றும் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் வைத்தியர் மதனழகன்,சிறுநீரக சிகிச்சைப்பிரிவின் தலைவர் வைத்தியர் முஜாஹீத் உட்பட இந்த சிகிச்சையில் பங்குகொண்ட வைத்திய நிபுணர்கள் இந்த ஊடக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காதலித்து கரம்பிடித்து 25 ஆண்டுகள் வாழ்ந்த கணவனும் மனைவியும் ஒரே நாளில் இயற்கையெய்தினர்

  • May 21, 2025 - 02:59 PM
  • 0 Comments

கம்பஹா, பஸ்யால பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்து ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பஸ்யால பகுதியைச் சேர்ந்த 58 வயதான நாமல் குமார மற்றும் அவரது மனைவி 60 வயதான துலானி சமரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். துலானிக்கு இதய நோய் இருப்பதை அறிந்திருந்தும் அவரைக் காதலித்த நாமல், அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமான துணையாக இருந்துள்ளார். துலானியும் நாமலும் இரு வீட்டாரினின் […]

உள்ளூர் செய்திகள்

ஞானசாரதேரருக்கு ஏறாவூர் முஸ்லீம்களால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

  • May 21, 2025 - 02:06 PM
  • 0 Comments

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன் என தெரிவித்துள்ள ஞானசார தேரர்,நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதபதற்றம் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார். […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp