jaffna university student dignity concerns | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலை..?

  • Jul 9, 2026 - 10:50 AM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில் , பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு […]

71 colombo university students dengue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு..!

  • Jul 9, 2026 - 10:36 AM
  • 0 Comments

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின் விரிவுரைகளை மாத்திரம் இணையவழி மற்றும் கலப்பு முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டார். டெங்கு […]

palaly east land release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி கிழக்கு பிரதேசம் விடுவிக்கப்படும் சாத்தியம்..??

  • Jul 9, 2026 - 09:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஒரு பகுதி காணி யை விடுவிக்க இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் போது, கடந்த 36 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அதில் குறிப்பாக பலாலி வீதிக்கு கிழக்கு புறமாக […]

rising crude oil prices | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அதிகரித்த கச்சா எண்ணெய் விலை..!

  • Jul 9, 2026 - 09:52 AM
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09.07.2026) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன், பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.01 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது. ஐக்கிய […]

change archunas seat | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்..!

  • Jul 9, 2026 - 09:48 AM
  • 0 Comments

பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், தாங்கள் அறிந்தவாறு, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரங்கமாக என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசியும், வன்முறை ரீதியாக அச்சுறுத்தியும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் […]

sri lanka weather today 10 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jul 9, 2026 - 09:45 AM
  • 0 Comments

09.07.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

jaffna special dengue control week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் யூலை 13 தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்..!

  • Jul 9, 2026 - 09:41 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் – ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. […]

jaffna rising dengue seek medical care | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அதிகரிக்கும் டெங்கு ஒருநாள் காச்சல் என்றாலும் வைத்தியரை நாடுங்கள்..!

  • Jul 9, 2026 - 09:35 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தில் ஜூலை 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயுடன் […]

northern sri lanka renewable energy sea | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு..!

  • Jul 9, 2026 - 09:32 AM
  • 0 Comments

வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பான செயலமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மன்னார் மாவட்ட செயலர் கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எந்திரி என். சுதாகரன், SEA ஆலோசனை, நிறுவன பொது முகாமையாளர் டாக்டர். நரேந்திர டி சில்வா, Oriental Consultants Global Co அணியின் தலைவி […]

colombo high court death sentence | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சற்று முன் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு உயர் நீதிமன்றம்..!

  • Jul 8, 2026 - 05:07 PM
  • 0 Comments

1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொலைக்குற்றம் சாட்டிய 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பிரதிவாதிகள் இன்று (08) நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், மற்றொரு பிரதிவாதி இல்லாமல் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊