உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமரர் ராயூ உதைபந்தாட்ட நினைவுக் கிண்ணம் ஆரம்பமானது..!

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அமரர் ராயூ நினைவுக் கிண்ண உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நேற்றைய தினம்(15.04.2026) மாலை 04.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் நகுலேஸ்வரன் தலைமையில்
வத்திராயன் உதயசூரியன் மைதானத்தில் ஆரம்பமானது.
மறைந்த அமரர் ராயூ அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை அவரது தாயார் அணிவித்துவைக்க மலரஞ்சலியை வத்திராயன் கிராம சேவையாளர் ஆரம்பித்துவைத்தார்
அதன்பின்பு விளையாட்டுக் கழக தலைவர்கள்,லீக் உறுப்பினர்கள்,விளையாட்டு வீரர்கள்,பொதுமக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடரின் முதலாவது போட்டி ஆரம்பமானது.
உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் மோதியது
விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிந்ததால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் உடுத்துறை பாரதி அணி வெற்றி பெற்றது.
இவ் ஆரம்ப நிகழ்வில்
வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள்,வத்திராயன் கிராம சேவையாளர்,வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,அமரர் ராயூ அவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிருபர்
பூ.லின்ரன்
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/4375837669326259

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp