பளை பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (15.04.2026) ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விபரங்கள்:
முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை வழமை போல ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற முதியவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.
அடையாளம் காணப்பட்டவர்:
சடலமாக மீட்கப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணைகள் தீவிரம்:
இச்சம்பவம் குறித்து பளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். முதியவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதால், இது கொலையா அல்லது வேறு ஏதேனும் விபத்தா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர்
பூ.லின்ரன்
What’s your Reaction?
