raghuraman kili makkal london meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியருமான சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களுக்கும் கிளி மக்கள் அமைப்பினருக்கும் இடையே நேற்று இலண்டனில் கலந்துரையாடல் இடம்பெற்றது

  • Jul 10, 2026 - 10:08 AM
  • 0 Comments

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணராகப் பணிபுரிகின்றார். நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியில் கிளிநொச்ச்சிப் பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகப்பேற்று பிரிவில் இயங்கும் செயற்கைக் கருத்தரிப்பு நிலையத்தினை இவரது தலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட துறைசார் குழுவினரும் கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவக்குழுவும் கடந்த ஜூன் மாதம் முதல் செயற்படுத்தி வருகின்றனர். இலங்கையில் அரச நிதியில் இயங்கும் முதலாவது இலவச செயற்கைக் கருத்தரிப்பு நிலையம் கிளிநொச்சிப் பொது […]

singer mariyasele gunathilaka passes away | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்..!

  • Jul 10, 2026 - 09:59 AM
  • 0 Comments

பிரபல பாடகியான மரியசெல் குணதிலக்க இன்று (10) காலை காலமானார். திடீர் நோய் நிலைமை காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10.07.2026) அதிகாலை அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறையும் போது அவருக்கு வயது 68 ஆகும்.

forest road reopened today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காட்டு பாதை இன்று காலை திறக்கப்பட்டது..!

  • Jul 10, 2026 - 09:55 AM
  • 0 Comments

கதிர்காம பாதயாத்திரைக்காக புனித வனப்பாதையூடாக பக்தர்கள் பயணிக்க உத்தியோகபூர்வமாக இன்று காலை பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் இப் பாதை திறந்திருக்கும். (24 ம் திகதி வரை) இன்றைய தினம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கானகப் பயணத்திற்காக குமண நுழைவாயிலூடாக வனத்திற்குள் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

four killed in fatal accidents | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோர விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு..!

  • Jul 10, 2026 - 09:47 AM
  • 0 Comments

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (09.07.2026) இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. போகஸ்ஹந்திய – புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த […]

thanthamalai murugan temple festival begins | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!

  • Jul 10, 2026 - 09:44 AM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றைய தினம் (09.07.2026) பக்திப்பூர்வமான கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/900273045799267  

anura france visit cancelled | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் திடீர் ரத்து..!

  • Jul 10, 2026 - 09:37 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தப் பயணம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெறவிருந்த நிலையில், இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதனை முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன. இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் அறிவிப்புகளின்படி, பிரான்ஸ் பயணத்தின் முக்கிய நோக்கம் பிரெஞ்சு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய […]

kalmunai official threat police probe | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்..! பொலிஸார் விசாரணை

  • Jul 10, 2026 - 09:34 AM
  • 0 Comments

கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று (09.07.2026) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் தொடர்பில் தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, கல்முனை மாநகர சபைப் பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நௌபீஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். […]

france beat morocco reach semifinals | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

அரையிறுதிக்கு தகுதியான பிரான்ஸ் மொரோக்கோவை வீழ்த்தியது..!

  • Jul 10, 2026 - 09:31 AM
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் விறுவிறுப்பான கால்இறுதிப் போட்டியில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு கெத்தாக நுழைந்துள்ளது. கடந்த 2022 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் மொரோக்கோவை வீழ்த்திய பிரான்ஸ், இந்த முறையும் அதே வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து நடுகளத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்கு, ஆட்டத்தின் 60-வது […]

sri lanka weather today 11 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jul 10, 2026 - 09:25 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, புத்தளம், அம்பாந்தோட்டை, […]

gotabaya ranil namal secret colombo politics | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோட்டபாய, ரணில் , நாமல் ரகசியம்; கொழும்பு அரசியலில் சலசலப்பு..!

  • Jul 9, 2026 - 11:03 AM
  • 0 Comments

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற திருமண வரவேற்பு வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தனியாக கூடி பேசிய சம்பவம் கொழும்பு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமண வரவேற்பு வைபவத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். இந்நிலையில் கோட்டாபய, ரணில் மற்றும் நாமல் ஆகியோர் சம்பாஷணை செய்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவர்கள் கோட்டபாய, ரணில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊