விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம்..!
வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போசாக்குக் கண்காட்சியில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போர்க் கால இடம்பெயர்வுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகக் கடந்த காலத்தில் பலரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் […]









