சுவிஸ்சர்லாந்து வாழ் வர்த்தகரின் நிதிப் பங்களிப்பில், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியிலிருந்து 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மூலம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான பாராட்டு விழா, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 13 மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை வழங்கினார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், “யுத்தத்தினால் நலிவடைந்துள்ள நாம், உலக அரங்கில் சாதனையாளர்களாக உருவெடுப்பதற்கு கல்வியே முதன்மையான வழியாகும்” என வலியுறுத்தினார்.
கல்லூரியின் அதிபர், வணக்கத்துக்குரிய அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வில் விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார்.


