உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

42 பழங்கால ஓவியங்கள் தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயம்..!

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இன்று (21.05.2026) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பின்னரே இந்த காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, இருப்புப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோதிலும், தற்போது கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை