strong winds expected parts of sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம்..!

  • Jul 17, 2026 - 09:29 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேவேளை காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்று மணிக்கு சுமார் […]

arjuna mp development meeting issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியினால் அமைதியின்மை..!

  • Jul 16, 2026 - 01:48 PM
  • 0 Comments

அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியினால் அமைதியின்மை காரணமாக அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை(16.07.2026) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க […]

yoshitha case date set | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யோஷிதவின் வழக்கு திகதியிடப்பட்டது..!

  • Jul 16, 2026 - 01:43 PM
  • 0 Comments

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் […]

trincomalee kemba arrest drugs weapons seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை ‘கெம்பா’ கைது; வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களும் மீட்பு..!

  • Jul 16, 2026 - 01:36 PM
  • 0 Comments

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ என்பவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி மின்சார நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக […]

prime minister returns qatar | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டாரில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்..!

  • Jul 16, 2026 - 11:25 AM
  • 0 Comments

கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (16) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார். கட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுஸைல் (Lusail) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், அந்நாட்டின் தற்போதைய அமீரான ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து […]

president chairs energy ministry meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் வலுசக்தி அமைச்சின் கலந்துரையாடல்..!

  • Jul 16, 2026 - 10:54 AM
  • 0 Comments

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (15.07.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட […]

police officer shooting suspect | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொலிஸ் அதிகாரியை சுட்ட சந்தேகநபர் தொடர்பில் பரபரப்பு தகவல்..!

  • Jul 16, 2026 - 10:47 AM
  • 0 Comments

கட்டுநாயக்க ​பொலிஸ் பிரிவிற்கு உட்பட பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மல்லுக்கட்டி, அவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. சந்தேகநபரை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து அவர் […]

navithanveli job fair | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச தொழில் சந்தை..!

  • Jul 16, 2026 - 10:37 AM
  • 0 Comments

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் சந்தை நேற்றையதினம் (15.07.2026) “நாவிதன்வெளி பிரதேச கலாசார மண்டபத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் இடம் பெற்றது இந் நிகழ்வுக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நிரூபா திணைக்கள மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் . பல தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் (HNB Life, Amana Taka Full life, celince life, metropolitan college Green plantation, […]

jaffna dengue awareness program | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு..!

  • Jul 16, 2026 - 10:23 AM
  • 0 Comments

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் சிவகரன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர் என்.பரமேஸ்வரன் கலந்து கொண்டு டெங்கு நோய்க்காரணி, டெங்கு நோய்க்கான அறிகுறிகள், டெங்கு நோகள், டெங்கு பரவும் இடங்கள் அதற்கான நோய்ய் ஏற்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கை தடுப்பு நடவடிக்கைகள், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது, […]

jaffna womens kabaddi team champions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மாவட்ட பெண்கள் அணி..!

  • Jul 16, 2026 - 09:54 AM
  • 0 Comments

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினருக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அதில் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை கெளரவிக்கப்பட்டார்கள். முன்னதாக போட்டியில் வெற்றி […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊