ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட ரோசி சேனாநாயக்க..!
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க இன்று (17) முற்பகல் ஆஜராகியுள்ளார். தனது மேயர் பதவிக் காலத்தின் போது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில், அரச நிறுவனமான சதொச ஊடாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் தேவையுடைய மக்களுக்குமான உணவு வவுச்சர்களை வழங்கும் வேலைத்திட்டம் குறித்து விசாரிப்பதற்காகவே தாம் அழைக்கப்பட்டிருந்ததாக […]









