முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாகி இருந்தார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
