உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கைக்கெதிராக ஐநாவில் சிங்கப் பெண்ணாக ஓங்கியொலித்த அனந்தி சசிதரன்.

  • Mar 22, 2025 - 09:12 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலான ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் […]

உள்ளூர் செய்திகள்

வவுனியா சிறைச்சாலையிருந்த கைதி லாவகமாக தப்பினார்- பொலிஸார் தேடுதல்

  • Mar 22, 2025 - 05:46 PM
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கைதியை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

  • Mar 22, 2025 - 05:10 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர், ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார். […]

உள்ளூர் செய்திகள்

ஆளும் கட்சி புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தல் களத்திற்கு வருகின்றது- டக்ளஸ் தேவானந்தா

  • Mar 22, 2025 - 05:04 PM
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் இருப்பதும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் தலைமை காரியாலயமான ஸ்ரீதரில் விசேட கலந்துரையாடல் இன்று […]

உலகம் கனடா

டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் டவுன்டவுன் வளாகத்தில் ஆணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

  • Mar 22, 2025 - 04:55 PM
  • 0 Comments

டொரொண்டோ பொலிசாரின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஊழடடநபந ளுவசநநவ இல் உள்ள டுநளடநை டு. னுயn மருந்தியல் கட்டிடத்திற்கு வெளியில் இன்று  நடைப்பெற்றுள்ளது ஆரம்பத்தில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியதல்ல என்று பொலிசார் தெரிவித்திருந்தபோதிலும், பின்னர் இது ஒரு கொலை என உறுதி செய்துள்ளனர். மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தாலும், யாரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் அல்லது சம்பவம் […]

உலகம் வினோத உலகம்

16 வயது மாணவனுடன் ஐஸ்லாந்து பெண் அமைச்சர் பாலியல் உறவால் பதிவியிழந்தார்

  • Mar 22, 2025 - 03:55 PM
  • 0 Comments

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் 16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிற நிலையில் இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் 58 வயதுடைய ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் என்பவராகும் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது தனது 22 வயதில் 16 வயது மாணவர் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது

  • Mar 22, 2025 - 03:35 PM
  • 0 Comments

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பணிகள் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விமான நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது. இதன் காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக நேற்று (21-03) அறிவிக்கப்பட்டது. அத்துடன் கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே நேற்று (21-03) இயக்கப்படவிருந்த இரண்டு சேவைகளையும் இரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் […]

உலகம்

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரின் சட்ட பாதுகாப்பை டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார்

  • Mar 22, 2025 - 03:16 PM
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது. இவர்கள் கடந்த ஜோபைடன் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் குடியேறினர். இவர்கள் அமெரிக்காவில் வாழவும், வேலை […]

இந்தியா

விடுதலை சிறுத்தைகளின் பெனரை கிழித்ததால் வீதியின் குறுக்கே காரை நிறுத்தி வி.சி.க.வினர் வீதி மறியல்

  • Mar 22, 2025 - 03:01 PM
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.  

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் விபத்து ஒருவர் பலி மூவர் காயம் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவில் அனுமதி

  • Mar 22, 2025 - 02:35 PM
  • 0 Comments

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதேவேளை மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர். இதன் போது, ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp