உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுமியை காதலித்து பாலியல் துன்புறுத்தல கொடுத்த ; இளைஞர் கைது

  • Mar 21, 2025 - 03:45 PM
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததோடு அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார்

  • Mar 21, 2025 - 03:37 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (ளுயஅரநட Pயியசழ) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர வலயத்தை பாதுகாத்து அமைதியான இந்து சமுத்திர வலயத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அட்மிரல் பபாரோ பாராட்டினார். இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு […]

உள்ளூர் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளது அநுர அரசென்கிறார் சஜித் பிரேமதாச

  • Mar 21, 2025 - 03:27 PM
  • 0 Comments

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள் சழரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தரகர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் செய்திகள்

மகிந்தவின் மனைவி காணி புரோக்கராகவும் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சி.ஐ.டி.யிடம் கோரிக்கை

  • Mar 21, 2025 - 02:32 PM
  • 0 Comments

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்புல்கொடை மற்றும் களனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் தான் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும் சம்பந்தப்பட்ட காணி கோவிலுக்குச் சொந்தமானது அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ‘இந்த காணி மஹிந்த ராஜபக்ஷ ஆன்மீக அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்த காணி இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டு 10 […]

உள்ளூர் செய்திகள்

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தான் எதிரானவன் அல்லவென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

  • Mar 21, 2025 - 02:22 PM
  • 0 Comments

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச […]

உள்ளூர் செய்திகள்

இன்று மாலை 6 மணிக்கு வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது

  • Mar 21, 2025 - 02:08 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட குழு விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும். அதன்படி இன்றும் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வரவு செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு விவாதம் முடிவடைந்த பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் […]

உள்ளூர் செய்திகள்

வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் எம்மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல- அமைச்சர் சந்திரசேகரம்

  • Mar 21, 2025 - 01:55 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற வேட்புமனுத் தாக்கலின்போது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கருத்து வெளிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் […]

உள்ளூர் செய்திகள்

வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்களில் ஆஜராக முடியாதென்கிறார் எம்.ஏ சுமந்திரன்

  • Mar 21, 2025 - 11:20 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்று (20-03) ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக் கட்சியினர் நீதிமன்றில் வழக்கு தொடர தங்களை அணுகினால் அது தொடர்பில் வழக்கு தொடர தாங்கள் தயாரா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் ஒரு கட்சியின் […]

இந்தியா

இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது

  • Mar 20, 2025 - 05:33 PM
  • 0 Comments

பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அவையில் தான் பார்த்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் எனக்கூறி அரசியல் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp