உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் இராணுவமும் பொலிஸாரும் திடீர் சுற்றி வளைப்பு

  • Mar 24, 2025 - 10:18 PM
  • 0 Comments

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களைக் கைது செய்தல் மற்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், சிரேஷ்ட காவல்துறை பரிசோதகர் விஜயவன்ச தலைமையில் இந்த நடவடிக்கை சுமார் 3 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, வவுனியா தேக்கவத்தை ஆலடி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் நேற்று மட்டும் 6 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

  • Mar 24, 2025 - 09:53 PM
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி மன்றத் இடம்பெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி நாட்டில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 22 ஆம் திகதி எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை. எனினும் 23 ஆம் திகதி நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அலுவிஹாரயிலிருந்து பலாபத்வல சந்தி வரையிலான வீதிகளில் வேட்பாளர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா ஆகியோரை பிரிட்டன் தடை செய்துள்ளது

  • Mar 24, 2025 - 09:35 PM
  • 0 Comments

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று ,லங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளுடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது

  • Mar 24, 2025 - 09:05 PM
  • 0 Comments

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்ச சம்பவமானது கடந்த சனிக்கிழமை அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையின் போது, தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்று அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனுராதபுர பெண் வைத்தியர் மீதான பாலியல் வல்லுறவு பிரதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

  • Mar 24, 2025 - 06:04 PM
  • 0 Comments

அனுராதபுர வைத்தியசாலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதான சந்தேக நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வைத்தியர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், இரண்டாவது நாளாக அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் திறந்துவைத்துள்ளார்

  • Mar 24, 2025 - 05:50 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்று வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், விகாரையை அகற்றி, தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரி வருவதுடன், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இருந்த போதிலும், விகாரை நிர்வாகம், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன், மடாலயம் ஒன்றினை எவ்வித […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 38 வருடங்களுக்கு முன் இறந்தவர்களுக்கு நேற்று இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது

  • Mar 24, 2025 - 05:32 PM
  • 0 Comments

இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு நேற்று பிள்ளைகள் இந்து சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை நிறைவேற்றியுள்ளனர். இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 1987ஆம் ஆண்டு கால பகுதியில் பெண்ணொருவரையும் அவரது மகனையும் இந்திய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்தனர். அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சி, அப்பெண்ணின் கணவன் தனது ஏனைய பிள்ளைகளின் உயிரை காப்பாற்றும் நோக்குடன், வீட்டின் வளவினுள் தனது மனைவி மற்றும் உயிரிழந்த பிள்ளையின் சடலங்களை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கசிப்பு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்

  • Mar 24, 2025 - 05:09 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒருபோத்தல் கசிப்பு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலுக்கும் மஹிந்தவின் புத்தாவுக்கும் தொடர்பில்லை- பொலிஸார்

  • Mar 24, 2025 - 04:31 PM
  • 0 Comments

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு யோசிதத ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி மற்றும் குழுவினருடன் சென்றுள்ளார் இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோசித ராஜபக்ஸவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது யோசிதத ராஜபக்ஸவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த மோதல் இரவு நேர களியாட்ட […]

உள்ளூர் செய்திகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை காணியை மீட்க மக்களை அணிதிரளுமாறு கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்

  • Mar 23, 2025 - 03:05 PM
  • 0 Comments

அனுர ஒரு புறத்திலே தான் இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என சொல்லிக்கொண்டு, இங்கேமேலும் மேலும் இந்த பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. காணி உரிமையாளர்களும் இவ்வாறான தகவல் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp