உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை குழப்பியதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • Mar 25, 2025 - 07:40 PM
  • 0 Comments

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குழப்ப நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

  • Mar 25, 2025 - 06:10 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்தவருக்கு : சிறைத் தண்டனை

  • Mar 25, 2025 - 06:04 PM
  • 0 Comments

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான நேற்று பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ஒரு உணவகத்தில் மலசல […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்திற்கு வந்துள்ளதாக ரஜீவ்காந் குற்றச்சாட்டு

  • Mar 25, 2025 - 05:59 PM
  • 0 Comments

பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது […]

உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரையானது இன அழிப்பிற்கான அடையாளம் – அருட்தந்தை மா.சத்திவேல்

  • Mar 25, 2025 - 05:54 PM
  • 0 Comments

இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளங்களாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இராணுவத்தினரால் தையிட்டியில் பலவந்தமாக கட்டப்பட்டுள்ள விகாரை சட்டத்துக்கு விரோதமானது. அதனால் தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்களும் ஒட்டுமொத்த தமிழர்களும் ஓங்கி குரல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • Mar 25, 2025 - 05:47 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2007 முதல் 2009 வரை வன்னியில் பாதுகாப்பு படையினரின் தளபதியாக இருந்தபோது படுகொலைகள்,சித்திரவதை ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் ஈடுபட்டதால் தடை

  • Mar 25, 2025 - 05:41 PM
  • 0 Comments

வசந்த கரணாகொட இக்காலப்பகுதியில் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தினர்,சட்டவிரோத படுகொலைகள்,சித்திரவதை ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். ஜெயசூரிய தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் ஜெயசூரிய சம்பந்தப்பட்ட நபராகும். விசேடமாக ஜகத் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்த குற்றத்திற்கே சவேந்திர டி சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது

  • Mar 25, 2025 - 05:30 PM
  • 0 Comments

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் […]

இந்தியா

த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

  • Mar 25, 2025 - 01:12 PM
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து […]

உலகம்

தென்கொரியாவில் காட்டுத்தீ 17 ஆயிரம் ஏக்கர் எரிந்து – அவசர நிலை அறிவிப்பு

  • Mar 25, 2025 - 01:03 PM
  • 0 Comments

தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp