உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்கள் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்

  • Mar 26, 2025 - 07:36 AM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இவ்வாறு இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதாக தெரியவருகின்றத முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் […]

உள்ளூர் செய்திகள்

பிரிட்டனின் தடையால் பதறும் சிறிலங்கா கல்விச் சமூகம்

  • Mar 26, 2025 - 07:25 AM
  • 0 Comments

  நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது வருங்காலத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையலாம். எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக கரிசணை செலுத்த வேண்டும். மியன்மார், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில், எதற்காக இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். கொழும்பில் நேற்று (25-03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

9 ஐ நிராகரித்துவிட்டார்கள் இல்லாவிட்டால் அரனத்திலும் வென்றிருப்போம்-சங்கு சித்தார்த்தன்

  • Mar 26, 2025 - 07:14 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (25-03) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இளம் யுவதி சடலம் மீட்பு வவுனியாவில் சம்பவம்

  • Mar 26, 2025 - 07:06 AM
  • 0 Comments

வவுனியா கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியாஇ கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். வவுனியா கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வாசலில் மணியும் மானும்

  • Mar 25, 2025 - 10:55 PM
  • 1 Comment

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. வேட்பு மனுவில் தேவையான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரித்தானியா தடை விதிப்பானது தமிழ் இளையோரின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறது சர்வதேச மையம்

  • Mar 25, 2025 - 10:45 PM
  • 1 Comment

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிள் மீதான பிரித்தானியாவின் தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா தடை விதித்துத்துள்ளமை தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது, 2020 இல் நடைமுறைக்கு வந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • Mar 25, 2025 - 09:16 PM
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

  • Mar 25, 2025 - 08:59 PM
  • 0 Comments

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி உடன் மோதினார். இதில் ஒசாகா 6-3 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜாஸ்மின் பவுலோனி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியா சினிமா

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மரணம், திரையுலகம் அதிர்ச்சி

  • Mar 25, 2025 - 08:50 PM
  • 1 Comment

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில்; குஜராத் களத்தடுப்பை தெரிவு செய்தது

  • Mar 25, 2025 - 07:56 PM
  • 0 Comments

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான நாணய சுழற்சியின் போது குஜராத் அணி அணித் தலைவர் சுப்மன் கில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp