உள்ளூர் செய்திகள்

இலங்கை இந்திய அரசுகள் பேச வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

  • Mar 26, 2025 - 05:55 PM
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்கள் இறைபதம் அடைந்தார்

  • Mar 26, 2025 - 02:15 PM
  • 0 Comments

இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு சர்வதேச இந்துமத பீடம் இரங்கல் தெரிவித்துள்ளது. சர்வதேச இந்துமத பீடம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்கள் நேற்று 25.03.2025 இறைபதம் அடைந்தார். குருக்கள் வேத ஆகம பாடசாலையை நிறுவி நூற்றுக்கணக்கான அந்தண சிவாச்சாரியார்களை உருவாக்கியவர். பல கும்பாபிஷேகங்களுக்கு பிரதானமாக இருந்து இறைபணி ஆற்றியவர். அதேவேளை வைதீக உபாத்தியராகவும் அந்தண பெருமக்களுக்கும் ஆன்மிக […]

இந்தியா

சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்திய வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

  • Mar 26, 2025 - 12:42 PM
  • 0 Comments

உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஸ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஸ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரிட்டனின் தடைக்குப் பின்னால் கனேடிய நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றச்சாட்டு

  • Mar 26, 2025 - 12:29 PM
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் 69 வயதுடைய விகாராதிபதி வெட்டிக்கொலை

  • Mar 26, 2025 - 12:15 PM
  • 0 Comments

அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (25-03) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்பாவல கிரலோகம […]

உள்ளூர் செய்திகள்

கடற்தொழிலாளர் பிரச்சனை  பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய மீனவர் சங்க தலைவர்களின்  பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது

  • Mar 26, 2025 - 12:03 PM
  • 0 Comments

இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று  ஆரம்பமாகியது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கியபிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின்,தங்கச்சிமடம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான மாணவ பட்டதாரிகளும் அரச வேலை கேட்டு போராட்டம்

  • Mar 26, 2025 - 11:54 AM
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இன்று கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீரப்பு போராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பொழுது ”இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் […]

இந்தியா

சென்னையில் தொடர் செயின் பறித்து வந்த கொள்ளையனை போட்டு தள்ளியது பொலிஸ்

  • Mar 26, 2025 - 08:11 AM
  • 0 Comments

திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சென்னையில் ஒரே நாளில் நடந்த […]

விளையாட்டு

ஐபிஎல் தொடரில்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் அணி

  • Mar 26, 2025 - 08:04 AM
  • 0 Comments

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதற்கான நாணய சுழற்சியில் குஜராத் அணி தலைவர் சுப்மன் கில் வென்று களத்தடுப்பபை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ஓட்டங்கள் ; குவித்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் […]

உலகம்

அமெரிக்க தேர்தல் விதிகளில் மாற்றம் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு அதிர்ச்சியளித்த ஜனாதிபதி டிரம்ப்

  • Mar 26, 2025 - 07:49 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். புதிய விதிமுறைகள் வாக்காளர்கள் வாக்கு செலுத்த என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், தேர்தல் நாளில் அனைவருக்கும் வாக்குச்சீட்டுகள் கிடைப்பது உறுதி செய்வது என பல விடயங்களை மாற்றும் வகையில் உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள உத்தரவில், தேர்தல் விவகாரங்களில் அமெரிக்கா அடிப்படை மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பை நடைமுறைப்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த உத்தரவு வாக்காளர் பட்டியலை பகிர்வதில் மாகாணங்கள் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp