விளையாட்டு

ஐபிஎல் தொடரில்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் அணி

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதற்கான நாணய சுழற்சியில் குஜராத் அணி தலைவர் சுப்மன் கில் வென்று களத்தடுப்பபை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ஓட்டங்கள் ; குவித்து ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் குவித்தது.
சிரேயாஸ் ஐயர் 97 ஓட்டங்களும் சஸாங்க் சிங் 44 ஓட்டங்களும எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த ஜோடி 21 பந்தில் ஓட்டங்களை சேர்த்தது.

இதையடுத்து 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சுப்மன் 33 கில் 33 ஓட்டங்களும ஜோஸ் பட்லர் 54 ஓட்டங்களும சாய் சுதர்சன் 74 ஓட்டங்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய