dengue cases approach 83000 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

83,000ஐ நெருங்கிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

  • Jul 28, 2026 - 10:44 AM
  • 0 Comments

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (27.07.2026) வரையில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 82,838 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகி வருகின்றனர். இது சதவீத அடிப்படையில் 21.25% ஆகும். […]

one killed in jaffna motorcycle accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் உந்துருளி விபத்தில் ஒருவர் சாவடைந்தார்..!

  • Jul 28, 2026 - 09:43 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் , இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த வேளை , அதிவேகமாக வந்த உந்துருளி மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

czech couple weds in trincomalee under saivite traditions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருமலையில் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட செக் குடியரசு ஜோடி..!

  • Jul 28, 2026 - 09:40 AM
  • 0 Comments

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (27.07.2026) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் திரு.மைக்கல் என்பவரும், செல்வி. சன்ரா என்பவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் மணி […]

all parties approve revised jaffna cultural trust agreement | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் கலாச்சார நம்பிக்கை நிதியப்பொறுப்புச்சபை திருத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அனைத்து தரப்பும் இணக்கம்..!

  • Jul 28, 2026 - 09:34 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; […]

sri lanka weather today 18 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jul 28, 2026 - 09:30 AM
  • 0 Comments

இன்று (28.07.2026) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறட்சியான வானிலையே காணப்படும். மத்திய மலைநாட்டின் […]

integrity culture clean sri lanka oath ceremony at jaffna district secretariat | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” – யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு

  • Jul 27, 2026 - 11:58 AM
  • 0 Comments

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உரையாற்றினார். அரசாங்க அதிபர் தமதுரையில், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் தேசிய […]

integrity culture clean sri lanka event held at vavuniya district secretariat | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “நேர்மைக் கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா”

  • Jul 27, 2026 - 11:51 AM
  • 0 Comments

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம்,வினைத்திறன்,மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்க்காக கிளீன் ஸ்ரீலங்கா -நேர்மைக் கலாசார வாரத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு “சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை” எனும் கருப்பொருளில் அரச அதிகாரிகளின் உறுதிமொழி […]

illegal deforestation in kilinochchi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் சட்டவிரோத காடழிப்பு..!

  • Jul 27, 2026 - 11:14 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் காட்டினை அழித்து சுமார் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதம் முறையில் கையகப்படுத்த முயன்ற தனியார் ஒருவரின் செயற்பாடு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தொடரும் நிலையில் குறித்த நபருக்கு எதிராக 06 வழக்குகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் தொடரப்பட்டு, அந்த வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என வனப்பாதுகாப்பு திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட […]

national integrity week begins today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம்..!

  • Jul 27, 2026 - 11:09 AM
  • 0 Comments

“நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம் ; “நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று (ஜூலை 27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. “தேசிய நேர்மை வாரம்” […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊