நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம்,வினைத்திறன்,மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்க்காக கிளீன் ஸ்ரீலங்கா -நேர்மைக் கலாசார வாரத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு “சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை” எனும் கருப்பொருளில் அரச அதிகாரிகளின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் திரு.பி.ஏ. சரத்சந்திர அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேசிய ஒழுக்க வாரத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு அனைத்து அரச அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் திரு.என். கமலதாசன் அவர்கள் உட்பட அனைத்து அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/4759425400952414
What’s your Reaction?

