புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” – யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு

integrity culture clean sri lanka oath ceremony at jaffna district secretariat | Pathivu News
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உரையாற்றினார்.
அரசாங்க அதிபர் தமதுரையில், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் தேசிய முன்னுரிமை செயற்பாடுகளாக Clean Sri Lanka, டியிற்றல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று முக்கிய திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் குறித்து அனைவரும் நன்கு அறிந்தவர்கள் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன்,
அந்த வகையில், Clean Sri Lanka தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக பல்வேறு செயற்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக அரச சேவைக்கான நேர்மைக் கலாச்சாரத்தை உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இது அனைவரின் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும்.
ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம்” என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிகழ்வு அந்த நேர்மை வாரத்தின் முதலாவது நிகழ்வாகும். ஒவ்வொரு அமைச்சுக்கும் தனித்தனி தினங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றின் பொறுப்புகளுக்கு அமைவாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இன்று “சட்டத்தை மதிப்போம் – நேர்மைமிக்க அரசு சேவை” என்ற தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
ஒரு அரச உத்தியோகத்தரிடம் இருக்க வேண்டிய நேர்மை, பொறுப்புணர்வு, கடமை உணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை நாம் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொதுமக்களுக்கு திறமையான, வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவது எமது அடிப்படைப் பொறுப்பாகும் எனவும்,
அரச சேவையின் திறன், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். அதற்காக ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தமது பணிப்பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வேண்டும்.
இன்று நாம் மேற்கொண்டுள்ள நேர்மை உறுதிமொழி ஒரு அரச சேவையாளர் எவ்வாறு தமது கடமைகளை உயர்ந்த ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது எனத் தெரிவித்தார்.
ஆதலால், மாவட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்களது பணிகளை நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் மேற்கொண்டு, பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். அதுவே “நேர்மையான அரசு சேவை – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கான உறுதியான அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்கும் வகையில் “நேர்மையான கலாசாரம் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம் 2026 ஜுலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெறுமனே ஒரு வாரத்துக்கு மட்டும் மட்டுப் படுத்தப்பட்ட ஒரு நினைவு தின விழாவாக கருதாது அரச சேவையின் அடித்தளத்தை நிலையானதாக மாற்றியமைக்கும் குறுங்கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான ஒரு அணுகுமுறையாக கருதி செயற்படுத்தப்பட்டுள்ளது.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp