உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல்..!

discussion on plans to attract major investors to the mineral resources sector | Pathivu News
நாட்டிலுள்ள வளங்களைச் சரியாக மதிப்பீடு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்நாட்டின் கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (28.10.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கனியவளத் துறைக்கு தேவையான காணிகளை இனங்காணல் மற்றும் கனிய வளங்களைக் கண்டறிதல் ஆகியவற்றின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும், கஹட்டகஹ மற்றும் எப்பாவல ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் கனிய வளங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பில் வெளியிடப்படும் அறிக்கைகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க தயாரித்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகளாக மாற்றுவதற்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் கனிய வளங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வெளிப்புற நிபுணர்களிடம் கையளிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இரத்தினக்கல் தொழில்சார் அகழ்வுப் பணிகளை சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் முன்னெடுப்பதற்காக பலமான கொள்கைத் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இரத்தினக்கல் ஏற்றுமதியின் போது இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றமும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், உள்நாட்டு இரத்தினக்கல் தொழிற்துறையை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது ஆகிய நோக்கங்களுடன் அமைக்கப்பட்டு வரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி. ஜயசுந்தர, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் பணிப்பாளர் (வரைபடங்கள் மற்றும் புவி-தகவல்) டி.ரி.டி.எஸ். விஜேசூந்தர, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் தலைவர் கலாநிதி எஸ்.பி.சமிந்த, புவியியலாளர் மற்றும் GSMB நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கே.என். பண்டார, கஹடகஹ கிராபைட் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஈ.பி.ஏ. ஹேமலால் உட்பட அதிகாரிகள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊