நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று (27.07.2026) வரையில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 82,838 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகி வருகின்றனர். இது சதவீத அடிப்படையில் 21.25% ஆகும்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 16,457 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,685 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இன்றைய தின நிலவரப்படி 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இது சதவீத அடிப்படையில் 0.07% ஆகும்.
What’s your Reaction?

