உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருமலையில் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட செக் குடியரசு ஜோடி..!

czech couple weds in trincomalee under saivite traditions | Pathivu News
செக் குடியரசைச் சேர்ந்த இருவர் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (27.07.2026) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் திரு.மைக்கல் என்பவரும், செல்வி. சன்ரா என்பவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் மணி மாலையை தாலிக்குப் பதிலாக அணிவித்துக் கொண்டனர். இதன்போது குருவினால் மாப்பிளைக்கும் பெண்பிள்ளைக்கும் சிவலிங்கம் ஒன்று வழங்கப்பட்டது.
யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதன் அவர்களினால் இந்த விடுதியில் வைத்து வெளிநாட்டவருக்கு சைவநெறிப்படி நடத்தி வைக்கப்பட்ட 10 ஆவது திருமண பந்தம் இதுவாகும். குறித்த விடுதியின் உரிமையாளரான மறெக் நெமெக் செக் குடியரசு பிரஜை ஆவார். அவர் யோகக் கலையை பயில்வதற்காக திருக்கோணமலையிலுள்ள யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் நண்பரானார். அவர் சைவ நெறிமுறையுடனான வாழ்வு பற்றி நாட்டம் கொண்டிருந்தார். இந் நிலையில் தனது நாட்டு பிரஜைகளுக்கு சைவநெறிமுறையுடனான திருமண பந்தத்தை தனது விடுதியில் வைத்து சிவதிரு கலியுகவரதன் மூலமாக திருமணபந்தத்தில் இணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1380507920704160
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp